11.1.12

தமிழகத்தின் அரிய ஓவியங்கள்




நம் நாட்டை கொள்ளை அடித்த வெள்ளையர்கள் (கொள்ளையர்கள்) நம்நாட்டின் இயற்கை அழகையும் அரண்மனைகள் மற்றும் கோட்டைகள், கோயில்கள், அற்புத ஓவியங்களாக ஆக்கி அதிக விலைக்கு விற்றுள்ளனர். அவர்கள் வியபார நோக்கோடு வரைந்தாலும் நமக்கு நம் நாட்டின் அரிய ஓவியங்களும் அழிந்து போன  கோட்டைகளும் இன்று காண கிடைக்கின்றன. அவைகளில் மதுரைக் திருமலைநாயக்கர் மஹால், முற்றிலும் அழிந்து போன திப்புவின் லால் மஹால், மதுரைக் கிழக்கு மாசி வீதி, திருச்சி மலைக்கோட்டை, தஞ்சை பெரிய கோயில் மற்றும் இந்தியக் காட்சிகளை ஒவியங்களாய்த் திட்டி பதிப்போவியங்களாய் மாற்றி எராளமான பணத்துக்கு விற்றும் ஓவியப் பதிப்புகளைக் கொண்ட உயர்ந்த புத்தங்களைப் பதிப்பித்து விற்றும் பெருஞ்செல்வர்களாயினர் 1770-க்குப் பிறகு பிரிட்டிஷார் இந்தியாவில் காலுன்றத் தொடங்கிய தருணம் கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக பிரிட்டிஷ் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் இங்கு பதிவியிலமர்ந்து பதவிக்கேற்றபடி சொகுசு மிக்க வசதியான பங்களாக்களில் வசிக்க்லானார்கள் இந்த சொகுசான வீடுகளில் வசதிமிக்க வாழ்க்கைக்கு இந்தியாவைக் காட்டும்படியான இந்திய ஓவியங்கள் வேண்டப்பட்டன இத்தேவை ஒரு முகமாய் அதிகரிக்கவும் தொழில் ரீதியான பிரிட்டிஷ் ஓவியர்களோடு அமெச்சூர் கலைஞர்களும் இந்தியாவிற்க்கு இறக்குமதியனார்கள்.. பிரிட்டனிலிருந்த இயற்கைக் காட்சிகளைத் தீட்டும் ஓவியர்களின் பொருளாதார நிலை பின் தங்கிப் போனது வருவாய்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்தன.  இந்துயாவில் மிக எளிதக பணம் பண்ணக்க்கூடிய அதிஷ்டக் கூறுகளைக் கொண்ட கதைகள் பிரிட்டனிலிருந்த இந்தியாவுக்குப் வந்து போன ஓவியக் கலைஞர்களால் பரவின. கீழை நாட்டுக் கட்டிடங்கள் கோயில்கள் மாளிகைகள் கோட்டைகள்   இயற்கைக்காட்சிகள் ஜரோப்பியக் கலை ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதாயிருந்தவை அவை அதுவரை யராலும் திண்டப்படாதிருந்தே வந்தவை அந்த புதிய காட்சி ருப விஷயங்கள் ஓவித்துக்கும் தொழில் ரதியான  ஓவியர்களுக்கும் மிகவும் தேவையாகின மற்றொரு மிக முக்கிய வரலாற்று நிகழ்வு பிரிட்டிஷாருக்கும் ஒரளவுக்கு பிரெஞ்சுக்காரர் களுக்கும் இந்தியாவைப் பற்றிய குறிப்பாக தென்னிந்தியாவைப் பற்றிய பல்வேறு சிந்தனைக்கு யோசனைக்கு –உண்ர்வுக்கு காரணமாகிப் போனது அவைதான் நான்கு மைசுர் யுத்தங்களும் ஹைதர் அலி திப்பு சுல்தான் என்ற இரு பெயர்களும் எனவே தென்னிந்தியாவைப் பற்றிய விரிவான குறிப்புகளும் விவரைணைகளும் ஓவியசித்தரிப்புகளும்(ஏனெனில் புகைப்டக் கருவி அன்று இல்லை ) வேண்டப்பட்டன   பிரிட்டனிலிருந்து இந்தியாவிக்கு வந்து பலகாலம் பல்வேறு திசைகளிலும் சுற்றித் திரிந்து வரைந்துகொண்டு தாய்நாடு திரும்பியதும் தாங்கள் அள்ளி வந்த இந்தியக் காட்சிகளை ஓவியங்களாய்த் தீட்டி பதிப்போவியங்களாய் (ETCHINGFS AND GRAPHICS)மாற்றி ஏராளமான  பணத்துக்கு விற்றும் ஓவியப்  பதிப்புகளைக்கொண்ட உயர்ந்த  புத்தகங்களைப் பதிப்பித்து விற்றும் பெருஞ்செல்வர்களாயினர் இந்தியாவிக்கு பயணம் செய்ய எவ்வித வாய்ப்புமற்ற ஆங்கிலேயர்கள, இந்தியாவைப் பற்றி அதன் கோட்டைகள், மாளிகைகள் , கோயில்களைப் பற்றி பயணக் குறிப்புகள், நூல்கள் வாயிலாகப் படித்தறிந்து பெற்ற ஆர்வத்தாலும்      இந்திய ஓவியக் காட்சிகளின் பதிப்புகளைப் பெரிதும் விரும்பி விலைக்கு வாங்கினர்இந்த வழியாக இந்தியாவக்கு வந்த முதல் ஓவியர் வில்லியம் ஹாட்ஜஸ்(WILLIAM HODGES), இவர் சென்னையில் --1780வந்திறங்கினாலும்தென்னிந்தியாவில் அதிகம் எதையும் வரையவில்லை.உடல் அசௌகரியம் ஒரு புறமிருக்க, இவர் தென்னிந்தியாவை அதிகம் சுற்றி பார்க்காத்தற்கு முக்கிய காரணம் பிரிட்ஷாருக்கும் – ஹைதர் திப்புக்கும் இடையே இருந்த பகைமையும் யுத்தங்களும் ஒரு வருடகாலம் மதராஸ் செயின் ஜார்ஜ் கோட்டையை விட்டு வெளிவராமல் முடங்கி கிடந்த ஹாட்ஜஸ் 1781 – ல் கல்கத்தாவுக்கு புறப்பட்டு போய்விட இந்தியக் காட்சிகளை வரைந்தார். இவை லண்டனில்  “ஆக்வாடிண்ட் எனும் முறையில் வண்ணப் பதிப்போவியங்களாய் மற்றும்
மாற்றம் பெற்று 48 பதிப்பு ஓவியங்களை கொண்ட ஓவிய நூலாக இந்தியாவின் தேர்ந்தெடுத்த காட்சிகள் “select view of india” எனும் பெயரில் 1785 – 88 களில் வெளிவந்தது. ஆக்வாடிண்ட் என்றால் கிட்டத்தட்ட நீர் வண்ணம் என்ற பொருள் தருவதோடு இவ்வைகை ஓவிய பிரதிகளைப் பார்க்கையிலும் ஒருவித நீர்வண்ண ஒவியத்தைப் பார்க்கும் அழகியல் அனுபவத்தையே பெறுகிறோம். இந்த வகை பதிப்போவிய வேலைப்பாடும் ETCHING  எனும் முறையின் ஒரு வடிவமே ஆகும் ஒருவித அதி நுண்துளைகளாலான பரப்பைக்கொண்ட பிரத்தியேக செப்புத்தகடுகள் ஆக்வாடிண்ட்  பதிப்போவிய வேலைக்காக அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்டன அதன் மீது மெழுகைப் பரவவிட்டு மிக நுண்ணிய நுனியைக் கொண்ட ஊசியினால்  எற்கெனவே தாம் வரைந்து வைத்திருக்கும் ஓவியக் காட்சியை மெழுகு பூசின பரப்பின் மேல் கீறிக்கீறி வடிவமைத்து பின் செப்புத் தகட்டை நைட்ரிக் அமிலத்தால் முக்கியெடுப்பார்கள், கிறப்பட்ட கோடுகள் அமிலத்தில் அரிக்கப்பட்டிருக்க, மெழுகுப்பூச்சில் மறைந்த பகுதிகள் அப்படியே இருக்கும், உருளையைக்கொண்டு காகித்த்தின் மேல் வைக்கப்பட்ட தகட்டின் மேல் அழுந்த உருட்ட, வண்ண மை பூசின. தகட்டின் கீறிய் வடிவங்கள் பதிவா.கும். பல்வேறு வண்ண மைகளைக் கொண்டு காகிதங்கள் மேல் செப்புத் தகட்டை உருளையால் அழுத்தி எவ்வளவு பிரதிகள் வேண்டுமானால் எடுக்ககும்  முறை ஆக்வாடிண்ட்.அகும்
மோற்கோள் 
நூல்
தமிழகக் கோட்டைகள் விட்டல்ராவ்