18.8.11

மகாகவி பாரதியார் கவிதைகள்

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
(செந்தமிழ்)

2.

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
(செந்தமிழ்)

3.

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

4.

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

5.

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.
(செந்தமிழ்)

6.

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.
(செந்தமிழ்)

7.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

8.

சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.
(செந்தமிழ்)

9.

விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.
(செந்தமிழ்)

10.

சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது


கோவை செட்டிபாளையம்
மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது


கோவை செட்டிபாளையம்
மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது


நூலின் காலம் - 18-ஆம் நூற்றாண்டு
இரா. ந. கல்யாணசுந்தரம் ஏடு பெயர்த்து எழுதிய தேதி: 16 - ஆகஸ்டு - 1939
வையவிரி வலையுலா வைப்பு - நா. கணேசன், ஹூஸ்டன்

  காப்பு

  பின்முடுகு வெண்பா வல்லோர் புகழ்பேரூர் வாழ்பட்டி நாதன்மேற் சொல்லுங்கண் ணாடிவிடு தூதுக்கு - வெல்லுநட னம்பயில உம்பர்தொழு நம்பனரு ளும்பெரிய கம்பகும்பத் தும்பிமுகன் காப்பு

  நூல்

  சிவபெருமான் துதி
  கார்போலும் மேனியனுங் கஞ்சமலர்ப் புங்கவனும்
  பார்கீண்டும் விண்பறந்தும் பன்னெடுநாள் - ஆர்வமுடன்

  தேடி வருந்தித் திரிந்துந் தெரியாமல்
  நீடுசுட ராவுயர நின்றருள்வோன் - பீடுடைய

  தக்கன் சிரத்தைத் தகர்த்துத் தகர்ச்சிரத்தை
  மிக்கத் திருத்தும் விறலாளன் - இக்குதனுக்

  காமாரி சூலதரன் காரிலகு கந்தரத்தன்
  தீமைப் புரத்தைச் சிரித்தெரித்த - கோமான்

  விடையன் நிருத்தமிடு மெய்யன் அலகைப்
  படையன் உமைக்குப் பதியான் - முடிவிலாச்

  சங்கரன்வெண் ணீற்றன் சதாசிவன்கங் காளனெரி
  தங்குங் கரத்தன் சபாபதியன் - கொங்கவிழும்

  கூவிளமார் கங்கைமதி கோளரவு தும்பைகொன்றைப்
  பூவறுகு சூடும் புரிசடையான் - காவியும்வெங்

  காலுஞ்செந் தாமரையும் கார்விடமுஞ் சாகரமும்
  வேலுங் கருவிளமும் மீனமும் - நீலவண்டும்

  மானுமம்பும் மாவடுவும் வாளுமொப்பற் றேயகன்று
  தானே யிரண்டுஞ் சரியாகி - வானுலகில்

  மண்ணுலகில் உற்பவித்து வாழும் உயிர்க்கெல்லாம்
  எண்ணில் அருளளித்தும் இன்புற்ற - கண்ணிணைசேர்
  10

  பேதை மரகதமாம் பெண்ணைத்தன் மெய்யிலொரு
  பாதியிலே வைத்துகந்த பட்டீசன் - தீதணுகாப்

  பேரைநகர் வாழும் பெருமான்றன் மெய்யழகோர்
  காரணமாய் உன்னிடத்தே காணுதலுஞ் - சீரிலகு


  கண்ணாடியின் சிறப்பு

  சுந்தரங்கள் எல்லாம் தொகுப்பில் ஒருவடிவாய்ச்
  சுந்தரரைக் காட்டும் தொழிலாடி - அந்தரத்தில்

  அம்புவியில் உள்ளபொருள் அத்தனையு நீயாடிக்
  கம்பிதஞ்செய் வித்திடுவாய் கஞ்சனமே - கொம்பனையார்

  வித்துருமப் பொற்றரள மிக்கபணி பெற்றிடினு
  மத்தவளை யுற்றிருப்பா யத்தமே - முத்தநகை

  மானார் கபோல வளத்துவமை பார்க்கிலுனைத்
  தானே புகழுந் தருப்பணமே - மானேயார்

  நாட்டங்கம் நாற்றிசையும் நாடிலுமுன் னேயசைய
  மாட்டாமற் செய்தபடி மக்கலமே - நீட்டுபதி

  னாறுபசா ரஞ்சிவனுக்கு அன்பினொடு செய்யவதில்
  மாறிலா தேந்துமொளி வட்டமே - வீறுலகில்

  தன்னேரி லாதமன்னன் தானிருக்கும் ஆசனத்தின்
  முன்னே யிருக்கு முகுரமே - துன்னியிடும்

  பைந்தார் நகரிற் படுதிரவி யங்களினில்
  ஐந்தா மதில்முதற்கண் ணாடியே - முந்து
  20

  நயமான லோகத்தில் நாடுவாய் நற்கல்
  நயமாகில் அங்கே நடிப்பாய் - இயல்பான

  அப்பு வழியே அருஞ்சரக்குக் கொண்டணைவார்
  கப்பல் நடத்தியிடு கண்மணியே - துப்புறுவார்

  ஆசையினால் வேதாந்த ஆகமநூல் பார்க்குமவர்
  நாசியிலே நின்றுணர்த்து நாயகமே - பேசரிய

  நண்ணுபொறி ஐந்தினையு நாடவறி யாதவென்றன்
  கண்ணிணைக்கும் கண்மணியாய்க் காட்டிடுவாய் - விண்ணுமண்ணும்

  எட்டுத் திசையோடு இருந்தவொரு பத்தினையும்
  கட்டுத் தவிர்த்திடுவாய் காணாதே - மட்டாரும்

  நூலணிந்த மெய்வலத்தை நொய்தினிட மாக்கியிடப்
  பாலைவலப் பாலிருத்தும் பக்குவனே - சால

  இரசமுடன் சேர்ந்திருப்ப தென்றறியார் உன்னை
  நிரசமென்று சொல்லுவது நேரோ - பரவசமாய்க்

  கண்ணாடி யுண்டதனங் கண்ணாடி நில்லாமற்
  கண்ணாடி யேன்விரும்புங் கண்ணாடி - திண்ணமதாய்

  மின்னார்க்கும் ஆடவர்க்கும் வேண்டுபொருள் வெவ்வேறே
  சொன்னாலும் உன்னையே சூழ்ந்துகொண்டு - முன்னிருத்திப்

  பம்பரத்தை வென்றதனப் பைந்தொடியா ருங்கடல்சூழ்
  அம்புவியைத் தாங்கும் அரசருமே - தம்பல்லைக்
  30

  கெஞ்சிப் பணிந்திட்டுன் கீழ்ப்பட்டார் பாரிலுன்னை
  மிஞ்சினபேர் ஆருரையாய் மெல்லோனே - அஞ்சீர்

  அயனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை

  நிறையுஞ் சராசரங்கள் நீடும் தராதலத்தில்
  மறைநாலு வாயான மாண்பால் - நிலையாத

  கஞ்சனம்பேர் காட்டுகையாற் காதலித்தோர்க் கானதினாற்
  பஞ்சடிசேர் மானாரைப் பண்ணுறலாற் - கஞ்சமலர்த்

  தேவனே யென்று தெரியும் பெரியோரிப்
  பூவுலகில் உன்னையே போற்றிடுவார் - மேவிவரு

  அரிக்கும் கண்ணாடிக்கும் சிலேடை

  கஞ்சனங் கம்படலாற் கட்டுண் டமைந்ததினால்
  அஞ்சொலார் தன்கைவசம் ஆனதினால் - மிஞ்ச

  ஒருவடிவாய் நின்றமையால் உள்ளே தெரிய
  உருவெடுத்துக் காட்டுகையால் ஓதும் - பெருவானும்

  மேதினியும் எல்லாந்தன் மெய்யில் அடக்குகையால்
  ஆதிநா ராயணநீ யாமெனலாம் - கோதிலார்

  அரனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை

  பாகத் திருத்தலாற் பன்னீருந் தங்கினதாற்
  சோகத்தை யார்க்குந் துடைத்தலால் - மாகத்தைத்

  தந்துள்ளே காட்டுகையால் தக்கவருள் நாட்டுகையாற்
  சிந்துகே சம்முரித்துச் சேர்ந்தமையால் - முந்தவரும்

  அம்பலத்தில் ஆடியென்றும் ஆனதினால் பேரைநகர்
  நம்பனுக்கு நேரான நாயகமே - உம்பருக்கும்
  40

  எட்டாமே மூவருக்கும் ஏமமாய் நின்றருளும்
  பட்டீசன் என்றுமனம் பாவிப்போன் - இட்டமுடன்

  ஆருறினுங் கைசேரு மத்தமே ரூபமதாய்ச்
  சேருவாய் கீழ்மேல் சிறப்பிலதாய்ப் - பாரிற்

  கணிகைமா தென்றுன்னைக் காணலாங் கண்ணே
  இணைபகரா வாழ்வே இனிதே - கணவருடன்

  ஊடுங் கனங்குழையார்க்கு உற்ற குணந்திருத்த
  ஆடவர்கை கூப்பி அடிபணிந்தால் - நாடாதே

  தோயார் கபோலத்தைத் தொட்டுமுத்தம் இட்டவுடன்
  வேயனைய தோளியர்கள் மேவுவது - மாயிலெல்லாம்

  ஆடியே யுன்றனெழி லாங்கபோ லங்கணினைக்
  கூடினதால் அன்றோ குணவானே - நாடியிடும்

  பெண்ணவர்கள் தங்குணமும் பெட்பும் பெருமையுநீ
  உண்ணயந்து கண்டிருப்பாய் உத்தமனே - கண்ணிணையாய்

  உன்னையே நட்புக்கு உறுதியென எண்ணியது
  முன்னமே வள்ளுவனார் மூதுரையிற் - சொன்ன

  நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
  பண்புடை யாளர் தொடர்பாம் - புவியிற்

  புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதாம்
  நட்பாங் கிழமை தருமாம் - நுணுக்கமாய்ச்
  50

  சொன்ன முறையின் படிநின் தொடர்புளதாற்
  பின்னை ஒருவரையும் பேசுவனோ - கன்னியர்கள்

  அந்தக் கரணம் அவருரைக்கு முன்னேநீ
  சிந்தை தனிலுணர்ந்து தேர்ந்திடுவாய் - பந்தமெலாம்

  கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்று
  மாறாநீர் வையக் கணியென்றுங் - கூறாமுன்

  ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
  தெய்வத்தோ டொப்பக் கொளலென்றும் - வையமெலாம்

  போற்றுதிரு வள்ளுவனார் பூவுலகோர்க் கேயினிதாய்ச்
  சாற்றுபொரு ளின்பயனீ தானாமே - ஏற்றரிய

  ஆடியே என்றன் அருமை நலங்களெலாங்
  கூடி யிருந்ததிந்தக் கொற்றவனே - மூடியென்னப்

  பேய்க்குரைத்தால் உண்மையினைப் பேசமனம் நாணினதால்
  தாய்க்கொழித்த சூலுமுண்டோ தாரணியில் - சேய்க்குப்

  பசிவருத்தங் கண்டிடின்நல் பாலருத்தித் தாய்தன்
  சிசுவைப் புரக்குஞ் செயல்போல் - நிசமாக