22.9.11

திருக்கோயில்களைப்பேணிய தமிழ்மன்னர்களின் பண்பாட்டுதிறன்




கோயில் என்பது மக்கள் வழிபடும் கடவளின் இல்லம்,
பண்டைக்காலம் தொட்டு பல சமயத்தாரின் கோயில்கள்
இருந்ததாகச் சங்க நூல்களிலிருந்துஅறிகிறேம்
முருகன் சிவன், விஷ்ணு.இந்திரன். ராமன்,துர்கை,
முதலிய இந்துமதத் தெய்வங்களின் கோயில்கள்
பலவற்றைத் தமிழ் மக்கள் நிறுவி வழிபட்டு
வந்தார்கள் தலவிருட்சங்களின் அடியில்பல
கோயில்கள் விளிங்கன.தில்லை-[சிதம்பரம் ]-மா
[எகாம்பரர் ]ஆல்- [ஆலங்காடு, ஆலந்துறை]
மருது [திருவிடைமருதூர்]ஏன்பவை
சில,
பஞ்சபூதத்தல்ங்கள் ,திருவாரூர். திருவாணைக்கா,
திருவண்னாமலை,திருக்காளத்தி,சிதம்பரம். ஏன்பவை

சிவனுடைய எட்டுவீரச்செயல்களை விளக்கும்
கோயில்கள்[திருக்கண்டியூர். பிரமன் சிரம்கொய்தது,]
[திருக்கோவலூர், அந்தகாசுரவதம்]திருவதிகை ,
திரிபுரம் எரித்தது]திருப்பறியலூர் தக்கன் சிரங்கொய்தது.
திருவிற்குடி-சலந்தராசுரவதம்,வழுவூர்-சுஜாசுரன் வதம்
திருக்குறுக்கை. காமனைஎரித்தது. திருக்கடவூர்,
காலனைக்காலால் உதைத்தது
சங்ககாலதில்பிற்பகுதியில்வாழ்ந்த
கோச்செங்ணனை. எந்தோள் ஈசற்கு
எழிழ்மாடம் எழபதுசெய்து உலகாண்ட
திருக்குலத்து வளச்சோழன்;என்று
திருமங்கை அழ்வார் போற்கிறர்
யானைஅழிக்கமுடியாமல் இரண்டாம்
தளத்தில் மூலத்தானம் உடைய
கோயிலூக்கு மாடக்கோயில் 
என்று பெயர்
விண்ணிழிவிமானம் உள்ள
திருவீழிமிழ்லையும்தேர் உருவில்
அமைந்த விமானத்தை உடைய
கரக்கோயிலும் [மேலைக்கடம்புர்]
தனிச்சிறப்புடைவை.பல்லவ
மன்னர்கள் பல கோயில்கலைக்
கட்டியுள்ளனர்.பல்லவ மன்னன்
மகேந்திரவர்மன்செங்கல்.மரம்
உலோகம். சுண்ணம்பு இல்லாமல்
ஒர் குடைவரைக் கோயில்லை
மண்டகப்பட்டில் எடுப்பிததான்.
[கி.பி. எழாம்,நூற்றண்டு]திமிழகத்தில்
பலகுடைவரைக் கோயில்கள்
குடைப்பட்டன.தேவாரத்தைபாடியசைவ
சமயாசாரியர்கள் வாழ்ந்தகாலத்தில் 274
கோயில்கள் பாடல் பெற்ற கோயில்கள்.
அவைகளில்190 சோழநாட்டைசோர்ந்தவை
பாண்டிய நாட்டில் 14ம் நடுநாட்டில் 22ம்`.
தொண்டை நாட்டில் 32ம், இருந்தன பல்லவர்
காலத்தில் சில மண்டளிகள் கற்றளிகளாக
ஆக்கப்பெற்றன.காஞ்சியிலுள்ள கைலாசநாதர்
கோயில் மாமல்லபுரத்துக் கடற் கரையிலுள்ள
தாழபுரீசுவரர்கோயில்நரசிம்மவர்மன்
என்ற இரண்டாம் இராசசிம்மன்காலத்தில் கட்டப்பட்டவை




கோயில்கட்டுவதில் சோழமன்னர்களின் பணி
போற்றதக்கது முதலாம் ஆதித்தன் காவிரியின்
இருகரையிலும் வானேங்கும்பலகற்றளிகளை
அமைத்தான் என்றுஅன்பில் செப்பேடு கூறுகிறது
இம்மன்னன் காலத்தில் சுமார்ஜம்பது கோயில்களாவது
கட்டப்பட்டன என்று அறிகிறேம் இவைகளில் முக்கியமானவை
கண்ண்ணூர்சுப்பிரம்ணியர்கோயில் திருக்கட்டலை
சுந்தரேசுவரர் கோயில். திருச்செந்துறைக் கோயில்.
லால்குடிகோயில் .சிநிவாசநல்லூர்கோயில்.
மன்னுபெரும்பழுவுர்[இரு தளிகள்கொண்ட]
அவனிகந்தர்ப்பஈசுவரம், திருவெறும்பியூர் ஆதித்தேசுவரம்.
குடந்தை நாகேசுவரர் கோயில். திருவையாற்றைச் சேர்ந்த
சப்தஸ்தான்க் கோயில்கள். கோயில் தேவராயன்பேட்டை.
திருப்புறம்பயம்.தகோலம்.திருக்கழுக்குன்றதிருமூலத்தானப்
பெருமானடிகள் கோயில் என்பவை  
தொண்டை  நாட்டை  வென்ற  பிறகு  முதலாம்
ஆதித்தன்  திருக்கழுக்குன்றத்துத்   திருமூலத்தானப்
பெருமானடிகள் கோயிலைப் புதுப்பித்தான். ம்மன்னனின்
 27-ஆம் ஆண்டின் கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு:
”ஸ்வஸ்திஸ்ரீ  கோ இராஜகேசரி வர்மற்க்கு யாண்டு
இருப்பத்தேழாவது களத்தூர்க் கோட்டத்து களத்தூர்க்
கூற்றத்துத் திருக்களுக்குன்றத்து ஸ்ரீ மூலத்தானத்துப்
பெருமானடிகளுக்கு இறையிலியாக ஸ்சுந்த சிக்ஷ்யன்
கொடுத்தமையில் அப்படியே வாதாபி கொண்ட நரசிம்மப்
போத்தரையரும் அப்பரிசே ரக்ஷித்தமையின் அந்துரையன்
குணவன் மகன் புக்கன் விண்ணப்பத்தினால் பூர்வ
ராஜாக்கள் வைத்தப்படியே வைத்தேன் இராசகேசரி பன்மனேன்-
இத்தன்மம் ரக்ஷித்தான் அடி என் தலை மேலன”.
    முதலாம் பராந்தகன் காலத்தில் எடுக்கப்பட்ட
கோயில்களில் முக்கியமான கோயில்களாவன.
1.    உய்யக்கொண்டான் திருமலை(கற்குடி)
உச்சீவநாதர் கோயில்.
2.    கொடும்பாளுர்-முசுகுந்தேசுவரம்
3.    கீழைப்பழுவூர்-திருவாலந்துறை மகா தேவர்
4.    நங்கவரம்-சுந்தரேசுவரர்
5.    புள்ளமங்கை-பிரமபுரீசுவரர்
6.    எறும்பூர்-கடம்பவனேசுவரர்
7.    திருவாவடுதுறை-கோமுத்தீசுவரர்
8.    கிராமம்-சிவலோகநாதர்(முண்டீசுவரம்)
9.    திருநாமநல்லூர்-திருத்தொண்டீசுவரம்
10.காட்டுமன்னார்குடி-வீரநாராயணப்
பெருமாள்(2)அனந்தீசுவரம்
11.தொண்டைமாநாடு-ஆதித்தேசுவரம்
12.திருவாமாத்தூர்-அபிராமேசுவரர் கோயில்
முதலியன.

       திருவாவாடுதுறைக் கோயிலைக் கற்றளிப்பிச்சன்
கட்டுவித்தான். இக்கோயிலைக் குடப்படைக்கு மேற்
பட்டு விமானப்பகுதியைப் பூர்த்திசெய்ய முதலாம்
பராந்தக சோழ மன்னரே 500 கழஞ்சு பொன்னை
வழங்கினார்.
           எறும்பூர் (தென் ஆர்க்காடு மாவட்டம் )
கோயிலின் ஸ்ரீ விமானத்தையும் அட்டப்பரிவாரக்
கோயில்களையும்,கோபுரத்தையும்,முதலாம்
பராந்தகனின் 28ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.

          முதலாம் ஆதித்தனுடைய பள்ளிப்படை
கோயில்(ஆதீத்தேசுவரம் அல்லது கோதண்ட
ராமேசுவரம்) பராந்தக மன்னரால் அவருடை
34 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்பாகவே கட்டப்
பட்டது.

          வரலாற்றுக் காலத்தில் எடுப்பிக்கப்பட்டு
கல்வெட்டுச் சான்றோடு உடைய கோயில் சோழ
புரத்தில் இருந்தது. இது பிந்திய பல்லவர்
காலத்தது.அக்கல்வெட்டுப்படி கோவியசய
கம்பவர்மற்கு எட்டாவது  பிருத்திவீகங்கரையர்
அதீதர் ஆயின பிற்பாடு தம் புத்திரர் ராசாதித்யன்
மகாதேவன் தம் அப்பனாரைப் பள்ளிப்படுத்த
இடத்து ஈசுவர ஆலயமும் அதீதகிரகமும் எடுப்
பித்துக் கண்டு சேவித்தார்.

       தொண்டைமனாட்டில் கட்டப்பட்ட கோயிலும்
ஆதீத்தனின் பள்ளிப் படைக்கோயிலே. முதல்
பராந்தக சோழரின்  மகனான, அரிஞ்சிகை சோழ
நாட்டெல்லையிலுள்ள மேற்பாடியில்  (போரில்)
இறந்ததால் அரிஞ்சிகை ஈசுவரம் என்ற பள்ளிப்
படைக்கோயில் ஒன்றை அவர் பெயரனான
முதலாம் இராசராசன்(அவனுடை 20ஆம்
ஆண்டில் எடுப்பித்தான்)

        சுந்தரசோழர் காலத்தில் கொடும்பாளூரில்
மூவர்கோயிலைப் பூதி விக்கிரமகேசரி தன் பெயராலும்,
தன் இருதேவியர்கள் பெயராலும் மூன்று தளிகளைக்
      உத்தமசோழர் காலத்தில் சில கோயில்களைக்
கண்டராதித்த தேவரின் தேவியாரும் உத்தம
சோழரின் தாயாருமாகிய செம்பியன்மாதேவியார்
ஸ்ரீ கண்டராதித்த தேவரின் திருநாமத்தால்
திநல்லம் (தேவாரகாலப் பெயர்)உடையார்க்கு
திருக்கற்றளி எடுப்பித்தார் நகைக்கருகில்
    புதியதோர் ஊர் நிறுவினார் அவர் பெயரால்
    செம்பியன்மாதேவி என்று இவ்வூர் நிலவுகின்றது.
    அங்கே ஒரு புதிய கோயிலையும் கட்டுவித்தார்.