என்னைபற்றி


நான் பிறந்தது குடிமங்கலம் என்னும் சிற்றூர். இவ்வூர் தாராபுரம் பொள்ளாச்சி சலையில் அமைந்துள்ளது. எங்கள் ஊரைப் பற்றி சங்காலத்தில் கொடிமங்கலம் என்னும் பெயரோடு இருந்துள்ளது. சோழர்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரோடு இருந்துள்ளது. இங்கு மிகவும் பழமையான சிவாலயம் ஒன்று ஊள்ளது. இக்கோவிலை மக்கள் சோழிஸ்வரன் கோவில் என்று குறிப்பிடுகிறார்கள். இங்கு உள்ள கல்வெட்டில் இக்கோவிலை உடையார் கோவில் என்று குறிப்பிடுகிறது. மேலும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு சேர்ந்த வாமன முத்திரைகள் பெயர் கொண்ட நாய்க்கர் காலத்து கல்வெட்டும் இங்கு உள்ளது.
சில வருடத்திற்கு முன்பு எங்கள் ஊருக்கு உறவினர் யாரும்  வரமாட்டார்கள் காரணம் காற்று பலமாக வீசும். எங்கள் ஊரில் பேய் காற்று வீசுவதினால் ஒரு நாளில் தங்கியவர்கள் மறுநாள் படுக்கவே பயப்படுவார்கள். மதிய நேரங்களில் சிறுவர்களை நால்ரோட்டிற்கு  அனுப்பமாட்டார்கள். எங்கள் ஊரைச் சுற்றி கள்ளிச்செடிகளும், அதிக அளவில் இருந்தது. அதிக அளவில் பேருந்து வசதிகளும் இல்லை. தேனீர் கடைகள் மாலை நேரங்களில் இருக்காது. நால்ரோட்டில் ஒரு சில வீடுகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போதைய நிலை  தழைகிழாக மாற்றம் அடைந்துள்ளது. அதற்கு காரணம் காற்றாலை துறையே ஆகும்.