14.8.11

அழிந்துபோனநகரங்கள் விஜய நகரம்


14ஆம் நூற்றாண்டிலிந்து ,16ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் நிலைத்திருந்த ,வெற்றி திரு நகர் ,
வித்தியாநகரம அல்லது விஜயநகரம் என்பது துங்கபத்திரையின் தென் கரையில் அமைப்புண்ட நகர மாகும். விஜயநகரத்தின் சுற்றளவு அறுபது கல் என்று 1420-இல் அதனைப் பார்வை யிட்ட இத்தாலியர் ஒருவர் குறித்துள்ளார். நகர மதில் ப்க்கத்தில் உள்ள மலையடிவாரம்வரை கொண்டுசெல்லப்பட்டிருந்தது.
நகரம் எறத்தாழ மலையரணைப் பெற்றதாக இருந்தது.
விஜயநகரம் எழு கோட்டைகளைக் கொண்டது. எழாம்கோட்டையின் நடுவிற்றான் அரசர் அரண்மணை
அமைந்திருந்தது வெளிக் கோட்டைச் சுவரி லிருந்து
வடக்கு வாயிலுக்கும் கிழக்கு வாயிலுக்கும் தெற்கு
வாயிலுக்கும் இடைப்பட்டநீளம் ஏழு அல்லது எட்டுக் கல்லாகும் மேற்கு வாயிலுக்கும் கிழுக்கு வாயிலுக்கும் இடைப்பட்ட
தூரமும் இவ்வளவேயாகும். முதல் முன்று கோட்டைச் சுவர்
இடையில் விளை நிலங்கள்,தோட்டங்கள்.போர்வீரர் இல்லங்கள்
அமைந்த்திருந்தன,மூண்றாம் மதிற் சுவரிலிருந்து இல்லங்கள் எழாம் கோட்டைச் சுவர் வரை கடைகளும் கடைத் தெருக்களும்
குடிகள்வாழ் தெருக்களும் நெருங்கியிருந்தன. அரண்மணைக்குப் பக்கத்தில் பெரிய கடைத் தெருக்கள் நான்கு காணப்பட்டன. அவை ஒன்றுக் கொன்று எதிராக அமைந்திருந்தன. ஒவ்வொரு கடைத்
தெருவின் தலைப்பிலும் பெரிய மேடையும் மக்கள் இருக்கத் தக்க இடமும் அமைந்திருந்தன. துங்கபத்திரையாற்றில் பெரிய அணைக்கட்டுக் கட்டி நீர் தேக்கப்பட்டது. அத்தேக்கத்திலிருந்து பதினைந்து கல் தொலைவில் நீர் கொண்டுவரப்பட்டு நகரத்திற்க்கு உதவுமாறு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேற்சொன்ன நான்கு கடைத்தெருக்களும் கண்டு களிக்கத்தக்கவையாக இருந்தன. மிக்க விலை மதிப்புள்ள நவரத்தினக் கடைகள், பொன் நகைக் கடைகள், பொன்னும் மணியும் விரவிச் செய்யப்பட்ட நகைகளை விற்கும் கடைகள், வெள்ளிப் பாத்திரக் கடைகள் என்பன சிறப்பிடம் பெற்றிருந்தன. அவற்றை அடுத்துச் செம்பு, ஈயம், வெண்கலம், தகரம், இரும்பு முதலிய உலோகப் பொருள்களைக் கொண்ட கடைகள் அமைந்திருந்தன. பருத்தியாடைக் கடைகள்,சீனப் பட்டாடைக் கடைகள் ஒருபுறம் சிறப்புறத் திகழ்ந்தன. ஒருபால் தந்தம், மரம், வெள்ளி, வெண்கலம் இவற்றால் செய்யப்பட்ட பலவகைப் பொருள்களைக் கொண்ட கடைகள் இடம் பெற்றிருந்தன. ஒருபக்கம் அகில்,சந்தனம்,குங்கிலியம் முதலிய மணப் பொருட் கடைகள் மலிருந்தன.
குழல்,யாழ்,வீணை,மத்தளம் முதலிய இசைக் கருவிகளை விற்கும் கடைகள் வீறுகொண்டிருந்தன. நெல், சோளம், வரகு, தினை, சாமை முதலிய கூலப் பொருட் கடைகள் பல இருந்தன. எள்நெய், தேங்காய்நெய், முத்துக்கொட்டை நெய் முதலிய நெய் வகைக் கடைகள் பல; புத்தகங்கள், எழுதுவதற்க்குரிய பனையோலை ஏடுகள், பதப்படுத்தப்பட்ட எழுத்தாணிகள் என்பன வைக்கப்பட்டிருந்த கடைகள் பல; மல்லிகை, முல்லை, இருவாக்ஷி,ரோஜா முதலிய மலர்க் கடைகள் பல இருந்தன. மல்லிகை, ரோஜா மலர்களைக்கொண்டு செய்யப்பட்ட பலவகை மணப் பொருட் கடைகள் பல பொழிந்திருந்தன. விஜயநகரத்தில் இருந்த அரசர் முதல் ஆண்டியீறாக அனைவரும் தினந்தோறும் ரோஜா மலர்களை மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர். அதனால் விஜய நகரத்தில் ரோஜா மலர் விற்ப்பனை மிகுதியாக நடைப்பெற்றது. வெற்றிலை-பாக்குக் கடைகளும் மிகப் பலவாக இருந்தன.நகர மக்கள் வெற்றிலை-பாக்கை மிகுதியாகப்பயன்ப்படுத்தினமையே இதற்குக் காரணம்
அரண்ம்ணையைச் சுற்றிலும் அமைச்சர்ப் பிரபுக் கள்
மண்டலத் தலைவர். படைத்தலைவர் ,அரசாங்க அலுவலாளர்.அவைப் புலவர்கள் முதலிய பெருமக்கள் வழ்ந்த தெருக்கள் அமைந்திருந்தன ஒவ்வொருதெருவும் அகன்று காறோட்டம் பொருந் தியதாக இருந்தது அத்தெக்களில் மாடமாளிகைகாணப்பட்டன,அத்தெருக்களை அடுத்து வாணிகப்
பெருமக்களின் தெருக்கள் விளங்கின.விஜயநகரகப் பெருநாட்டில்
உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் சிறந்த முறையில் நடைபெற்றுவந்ததால் வாணிகப் பெருமக்கள்
வளமுற்று வாழ்ந்தன்ர் அவர்கள் தெருக்கள் பொன்கொழிக்கும்
தெருக்க்க்களாகக் காணப்பட்டன.அவற்றுக்கு அப்பால் பொற்கொல்லர்.கன்னார்.தச்சர்,தந்தவேலை செய்பவர்.முத்துக்கோப்பவர் ப்வள வேலைக்காரர் கல் இழைப்பவர் கல்லுருச் செய்ப்பவர் செம்பு வெண்கலம்,
வெள்ளி பொன் இவற்றைக்கொண்டு பல உருவங்களை அமைப்பவர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் வாளமாகக்
காணப்பட்டன
விஜயநகரபேரரசின் வீழ்ச்சி;-
தலைக்கோட்டைப் போர் அல்லது இராட்சசத் தங்கடிப்போர்;-1565
இப்போர் நடந்த இடம் கிருஷ்ணை யாற்றுக்குத் தெற்கேயாகும்.ஆற்றுக்கு மறுகரையில் இதற்கு அருகாமையாக இராட்சச, தங்கடி என்ற இரு சிற்றூர்கள் இருந்தன. அவை ஒன்றுகொன்று ப்த்துக்கல் இடைவிட்டுக் கிடப்பவை. முஸ்லிம் அரசுகளில் படைகள் தங்கியிருந்த இடம் தலைக்கோட்டை என்ற ஊருக்கு அருகில் இருந்தது. அங்கிருந்து கிருஷ்ணை யாற்றைக் கடந்து வந்த பின்னரே போர் நடைபெற்றது. கன்னட மொழியின் பழய வரலாற்றேடு ஒன்று இந் நிலைகளை விளக்கி, போர், தலைக்கோட்டைப் போர் என்று அழைக்கப்படுவதைவிட,அருகில் உள்ள இரு சிற்றூர்ப் பெயர்களையும் இணைந்து இராட்சச தங்கடிப்போர் என்று கூறுவதே பொருத்தமென்று வாதிக்கிறது. கிராண்ட் டஃவ் போன்ற வராலாற்றாசிரியர் சிலர் இதனை ஏற்று இப் பெயரை மேற்க்கொண்டுள்ளனர். ஆனாலும் தலைக்கோட்டைப் போர் என்ற பெயரே பெருவழக்காகப் பரந்து புகழ் அமைந்ததுள்ளது தென்னகத்தின் வரலாற்றையே பெரிதும் மாற்றியமைத்த இப்பெரும் போர் நான்கு மணி நேரத்தில் முடிவடைந்துவிட்டது. போர் வெற்றி விஜய நகரத்தின் பக்கமே சாய்ந்து வருவது கண்டு எதிரி படையினர் தனது கடைசி சூழ்ச்சி துருப்பை தட்டிவிட்டனர். போரின் உயர் நெருக்கடியான கட்டத்தில் விஜயநகரத்தின் பெரும்படைத் தலைவர்கள் இருவர் திடுமென எதிர் பக்கம் சேர்ந்து தம் மன்னனையே எதிர்க்க தொடங்கினர். அவர்கள் ஒவ்வொரும் கீழும் எழுபதினாயிரம் எண்பதினாயிரம் படைவீரர் இருந்ததால், இது போரின் போக்கையே மாற்றிற்று. இதனைக் கண்டு இராமராயன் சிறிது நேரம் அதிர்ச்சியுற்றுத் திகைப்படைந்தார். பின் அதனால் எற்பட்ட குழப்பத்தைச் சமாளிக்க அரும்பாடுபட்டார். ஆனால் துரதிருஷ்ட வசமாக, அக்குழப்பத்தினிடையே அவர் அகமது நகர் அரசன் கையில் சிறையிடப்பட்டார். நிஜாம்ஷா அக்கணமே அவர் தலையை வெட்டி ஓர் ஈட்டியில் குத்தி விஜயநகரப் படைகளெல்லாம் காணும்படி உயர்த்தினான். இந்த கோரக் காட்சியை கண்டு முன்பே கலங்கியிருந்த படைவீரர்கள் மேலும் கதிகலங்கி ஒட்டம் எடுத்தனர்.
இராமராயன் வீரப்படைத் தலைமை ஒன்றையே அரணாகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசின் வலு அக் களத்திலேயே உடைவுற்றது. ஒடுவது ஒன்றையே குறியாகக் கொண்டு விஜய நகரப் படைகள் சிதறி பின்னடைந்தன.அப் படைவிரர்களைக் கொன்று குவித்து, ஒடுபவர்களைத் துரத்திக் கொண்டே கோல்கொண்ட படைவிரர்கள் விஜயநகரம் வரை தொடர்ந்தனர்.
போர்களத்தில் கிலியும் குழப்பமும் பேரரசெங்கும் ப்ரந்து நகரினுள்ளும் புகுந்தது. படைகளைச் சீரமைத்துப் பாதுகாப்புப் போர் நடத்தவோ, பேரரசினுள்ளும் நகரினுள்ளும் வரும் பாதைகளைக் காக்கவோ யாரும் எத்தகைய நடவடிக்கைகளிலும் முனையவில்லை. அவைப் பற்றி எண்ணவுமில்லை. வழி திறந்து வாயில் திறந்து வைத்திருந்த நகரத்துக்குள் முதல் முதல் புகுத்தவர்கள் தலை பிழைத்துத் தோற்றோடி வந்த வீரரும் தலைவர்களுமே. அவர்களும் கிலியைப் பரப்புவதன்றி வேறெதுவும் செய்யவில்லை.
களத்திலேயே விஜய நகரத்து வீரர் ஒரு இலட்சம் பேர் படுகொலைக்களாயிணர் நிலைமைய தமக்குச் சாதகமாக்கி
கொண்ட எதிரிபடைகள் தென்னகத்தின் தலைசிறந்த செல்வநகர்
நாட்கணக்காக,வாரக்கணக்காக்ப் பகற்கொள்ளை கொலை
சூறையாடப்பட்டு வந்தது களத்தில் சாகாதுபிழைத்த எதிரிபடைவீரர்கள் பின் தம் காலம் வரை பெருஞ் செல்வராயிருந்து வந்தனர் 1565ம்ஆண்டு ஜணவரி 23ஆம்தேதி அன்று உதயமான சூரியன் கடைசியாக ஒரு முறை விசாலமான
விஜ்யநகர சாம்ராஜ்யத்தைக் கண்டிருக்க வேண்டும் கலைகளூக்குகந்த இடமானா அழகியநகரமானஹம்பி விஜயநகரை கடைசியாக கண்டு கண்ணிர் விட்டிருக்க வேண்டும்
கோட்டை கொத்தளங்களையும் அழகியமாளிகைகளையம் உடைய செல்வ நகரைக் கடைசியாக நிர் மல்கிய கண்களால் கண்டு த்லைகுணிந்து விம்மி ம்றைந்ந்திருக்க வேண்டும்
துனை நூல் பட்டியல்
தெனனாட்டுப் போர்களங்கள் கா,, அப்பாத்துரையர்
வாதாபிவிஜயம் விக்கிரமன்