10.8.11

கொங்கு நாட்டுப் புலவர்கள்

கொங்கு நாட்டுப் புலவர்கள் சங்க காலத்தில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர் அவர்களின் பெயர்கள்;- 1. அஞ்சி அத்தை மகள் நாகையார்-அதியமான் நெடுமான் அஞ்சியின் மனைவியார். தகடூர்-அகம்-352 2. அதியன் விண்ணத்தனார் தகடூர் நாட்டினர் அகம்-301. 3.அந்தியிளங்கீரனார்-பவானி வட்டத்து அந்தியூர்.அகம்-71 4.ஆலத்தூர்க்கிழார்-இராசிபுர வட்டத்து ஆலத்தூர்.புறம்-34,36,69,225,324.குறுந்-112,350. 5.ஆவியார்-ஆவியர்குடியினர்;பழனி.புறம்-298. 6.இரும்பிடர்த்தலையார்-குளித்தலை வட்டத்துப் பிடர்தலை.புறம்-3 7.உலகடத்துக் கந்தரத்தனார்-அந்தியூரின் தென்கிழக்கில் உள்ள உலகடம்.அகம்-95,191.நற்-238,306.குறுந்-155. 8.எருமை வெளியனார்- எருமை நாட்டு[மைசூர் நாடு] எருமையூர்.புறம்-273,303.அகம்-73. 9.எருமை வெளியனார் மகனார் கடலனார்- எருமை வெளியனார் மைந்தர்.அகம்-72. 10.கருவூர் ஓதஞானியார்.குறுந்-71,227. 11.கருவூர் கண்ணம் பாளனார்.அகம்-180,263.நற்-159. 12. கருவூர் கண்ணம் புல்லனார்.அகம்-63.நற்-159. 13.கருவூர்க் கதப்பி கருவூர் கண்ணம் ள்ளை.புறம்-380.நற்-135.குறுந்-64,265,380. 14.கருவூர்க் கதப்பிள்ளைச்சாத்தானார்.புறம்-168.அகம்-309.நற்-343. 15. கருவூர்க் கலிங்கத்தனார் அகம்-183. 16. கருவூர்க்கிழார்.குறுந்-170. 17.கருவூர்க் கோசனார்.நற்-214. 18.கருவூர்ச்சேரமான் சாத்தனார்.குறுந்-268. 19. கருவூர் நன்மார்பனார்.அகம்-277. 20. கருவூர்ப் பவுத்திரனார்.குறுந்-162. 21. கருவூர்ப் பூதஞ்சாத்தனார்.அகம்-50. 22. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்.புறம்-219.10-22.இப் பதின்மூவரும் கொங்கு நாட்டுக் கரூர். 23.குடவாயிற் கீரத்தனார்-பல்லட வட்டத்துக் குட வாயில்.புறம்-242.அகம்-44,60,79,119,129,287,315,345,366,385.நற்-27,379.குறுந்-281,369. 24.குடவாயிற் கீரனக்கனார்-குடவாயில்.இவர் முன்னவர் மைந்தராக இருக்கலாம்.குறுந்-79. 25.குடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்-உடுமலை வட்டத்துக்குடிமங்கலம்.அகம்-179,232. 26.கொல்லிக் கண்ணனார்-கொல்லிமலை நாடு,குறுந்-34. 27.செங்குன்றூர்க்கிழார்-திருச்செங்கோடு.திருவள்ளுவ மாலை. 28.தகடூர் யாத்திரை ஆசிரியர் ஒருவர்.[பெயர் தெரியவில்லை] 29.பெந்தலைச் சாத்தனார்-பவானி வட்டத்துப் பெருந்தலையூர்.புறம்-151,164,165,205,294.அகம்-13,224.நற்-262. 30.பொன்முடியார்-தகடூர் நாட்டு பொன்முடி.பெண்புலவர்,புறம்-299,310,312. குறிப்பு;-7.உலகடம்-உரோடோகம்,ஒரோடோகம்,ஒரோடகம்,உரோடகம்,உரகடம் என,ஏடுகளிற் பலவாறாகப் பிறழ்ந்து காணப்படுகிறது. 28.குடவாயில்-இன்று,`கொடுவாய்என வழங்குகிறது.கொடுவாய்க் கல்வெட்டில் [பி3360] `கொடுவாயில்என்றுள்ளது. இடிகரைக் கல்வெட்டில்குடவாயில்ஒன்றே உள்ளது. 25.இவ்வூர்-’கொடிமங்கலம்எனவும் திரிந்து காணப்படுகிறது.[அகம்-179] ஆனால்,வழக்கில்குடிமங்கலம்என்றே வழங்குகிறது. பெயர்களுக்குப் பின்னுள்ள பாட்டெண்கள், அவர்கள் பாடிய பாடல்களின் எண்களாகும். மேற்க்கோள் நூல்கள்;- கொங்கு நாடு-புலவர் குழந்தை .94 சிற்றிலக்கியப் புலவர் அகராதி