30.7.11

புலவர் குழுந்தை!

காவிரிக்கரையில் அமைந்துள்ளது ஈரோடு மாநகரம். அதற்குத்தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டரில் இருப்பது ”ஓல வலசு“ என்னும் சிற்றூர். இச்சிற்றூரில் பிறந்தவர்தான் இராவண காவியம் படைத்த ”புலவர் குழுந்தை”. முத்துசாமிக்கவுண்டர் என்கிற பெருமகனாருக்கும் சின்னம்மை என்னும் நற்றாய்க்கும் 1906ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல்நாளன்று தோன்றிய குழந்தைக்கு குழந்தை என்றே பெயரிட்டுப்போற்றி வளர்த்தனர்

இவருடைய காலத்தில் இப்போதிருப்பது போன்று பள்ளிகள் கிடையாது. திண்ணைப் பள்ளி என்றுதான் உண்டு. பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப்பயிற்சி செய்வார்கள். அதுபோன்ற பள்ளியில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார்குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திற னைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு பாடவல்லவர். இவரு டைய பொழுது போக்கே பாட்டெழுதுவதுதான்.

1934ல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற் ற புலவர்குழந்தை ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி னார். 37 ஆண்டுகள் பணிபுரிந்தார் பவானி நகரில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பொறுப்பிலும் இருந்துஓய்வுபெற்றார்.

1926 லேயே இவர் எழுதிய ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்க ரைத் தாலாட்டு, வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரதஉற்சவச்சிந்து வீரகுமாரசாமி காவடிச்சிந்து வெள்ளகோவில் வழிநடைச்சிந்து ஆகியவை அச்சாயின.

2
தந்தை பெரியாரின் மீது அளவுகடந்த பக்தியும் மரியாதையும் கொணடவர். 1948ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. பெரியார் அவர்கள் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை எழுத அறிஞர்குழு ஒன்றி னை அமைத்தார் அதில் முக்கியமானவர் புலவர்குழந்தை.

பெரியார்கட்டளையை சிரமேற்கொண்டு இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரைஎழுதினார்.இந்த உரை யுடனே திருக்குறள் குழந்தையுரை என்ற நூல் வெளியிடப்பட்டது.

புலவர்குழந்தை முததம்மை என்னும் நங்கை நல்லாளைக் கரம் பிடித்தார். சமத்துவம் சமரசம் என்னும் இருபெண்மகவுகளை பெற்றார்.

சமத்துவம் என்பவர் கோவையில் பெருமைமிகுவிவசாயக் கல்லூரியில் இள.அறி.(வேளா) பட்டம் பெற்றார்.அந்தக் கல்லூரி யிலேயே பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

சமரசம் என்பவர் இரண்டாவது பெண் பி.ஏ.பி.எல். படித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு பவானியில் உள்ளார்.

குழந்தையவர்கள் எழுதிய இராவண காவியம் அறியாதவர் இருக்க இயலாது. இராவணனுக்கும் தமிழர்களுக்கும் ஏற்றம் தந்த நூல் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்குநிகரான பாடல்களை இடம் பெற செய்திருப்பது பெருமைக்குரியது. இந்த அரிய நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின்தடை நிக்கப்பட்டது.

3
பள்ளியாசிரியராய் இருந்த காலத்தில் மாணவர்கள் யாப்பருங்க லக்காரிகை கற்று கவிபாடுவதில் உள்ள சிரமமறிந்து அதை முற்றிலும் எளிமையாக்கி யாப்பதிகாரம் என்ற நூலை வெளியிட் டார் இதில் எளிய பயிற்சி மூலம் எவரும் கவிபாடும் ஆற்றலை பெற வழி செய்தார்.

அதைப்போலவே தொல்காப்பியத்தின் பொருள்திகாரம் முழுமைக்கும் எளிய உரை எழுதி அனைவரையும் கற்கும்படி எளிதாக்கினார்.

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இன்னூல் என்னும் இலக்கண நூற்பா நூலை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து தொடையதிகாரம் என்ற நூலும் வெளிவந்தது. கொங்குநாட்டின் மீது இஙகுவளர்ந்த தமிழ் புரவலர் மீதும் பற்றுகொண்ட குழந்தையவர்கள் கொங்கு மண்டல சதகம் கூறும் வரலாறுகளைத் தொகுத்து கொங்குநாடும் தமிழும் கொங் குகுலமணிகள் கொங்குநாடு ஆகிய வரலாற்று நூல்களையும் வெ ளியிட்டார்.

தொல்காப்பியர் காலத்தமிழர் வாழ்க்கைப் பண்புநலன் களை ஆராய்ந்து தொல்காப்பியர் காலத்தமிழர் என்ற நூலையும் எழுதினார். இவர் எழுதி இதுவரை வெளிவந்த நூல்கள் மொத்தம் முப்பத்திநான்கு அவற்றில் செய்யுள் வடிவில் 13, உரைநூல் வரி சையில் 3 இலக்கணப் பாங்கில் 3 உரைநடை நூல் வகையில் 15 வெளிவந்துள்ளன.

செய்யுள் நூல்கள்- 1.இராவணகாவியம், 2 அரசியலரங்கம்,3 காமஞ்சரி 4 நெருஞசிப்பழம் 5 உலகப் பெரியோன் கென்னடி
6 திருநணா சிலேடை வெண்பா 7 புலவர்குழந்தைப் பாடல்கள்
8 கன்னியம்மன் சிந்து 9 ஆடி வேட்டை 10 நல்லதம்பி சர்க்க ரைத் தாலாட்டு, 11 வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரதஉற்ச வச்சிந்து 12வீரகுமாரசாமி காவடிச்சிந்து 13 வெள்ளகோவில் வழிநடைச்சிந்து

உரை நூல்கள்
1. திருக்குறள் குழந்தையுரை 2 தொல்காப்பியபொருள்திகாரம் குழந்தையுரை 3 நீதிக்களஞசியம்.

இலக்கணம்
1. யாப்பதிகாரம் 2 தொடையதிகாரம் 3 இன்னூல்

உரை நடை நூல்கள்
1. தொல்காப்பியர் காலத்தமிழர் 2 திருக்குறளும் பரிமேலழகரும் 3புவாமுல்லை 4 கொங்குநாடு 5 தமிழக வரலாறு 6 தமிழ்வாழ்க 7 தீரன் சின்னமலை 8 கொங்குநாடும் தமிழும் 9 கொங்குகுலம ணிகள் 10 அருந்தமிழ்விருந்து 11 அருந்தமிழ்அமிழ்து 12 சங்கத் தமிழ்ச் செல்வம் 13 ஒன்றேகுலம் 14 அண்ணல் காந்தி 15 தமிழ் எழுத்து சீர்திருத்தம்

இவ்வளவு நூல்களையும் எழுதிய குழந்தையவர்கள் வேளாண் என்ற மாத இதழை1946 முதல் 1958வரை நடத்தினார் இத்தகு பெருமை பெற்று புலவர்குழந்தை தமிழுக்காக தம்மை எழுத்தில் ஈடுபடுத்தியது போலவே பேச்சிலும் வல்லவர்

இத்தகுபெருமை பெற்ற புலவர்குழந்தை 1975 ம் ஆண்டு அவரது உடல் நம்மிடமிருந்து நீங்கினாலும் அவரது எழுத்துக் களால் இன்றும் நம்மிடையே அவர் உள்ளார்

Courtesy: Pathivugal